கிளைமாக்ஸ் போட்டோவில் இல்லாத கிழக்கு வாசல் நடிகை.. 9 மாதத்தில் End Card.. விளக்கம் கொடுத்த ரேஷ்மா..!
Author: Vignesh12 April 2024, 6:44 pm
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது கிழக்கு வாசல் தொடர்.
இந்த சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா முரளிதரன். ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. இன்னும் 200 எபிசோடுகளை கூட தொடாத கிழக்கு வாசல் சீரியலை விஜய் டிவி தற்போது அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!
சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புகைப்படம் வெளியானது. அதில், நடிகை ரேஷ்மா இடம்பெறவில்லை இந்நிலையில், நடிகை ரேஷ்மா இது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் ஒரு மாதமாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்கவில்லை என கூறியிருக்கிறார். மேலும், இவர் சரியாக ஷூட்டிங் வராத காரணத்தால் தான் சீரியல் அவசரமாக முடிக்கப்படுகிறதோ என நெட்டிசன்கள் கமெண்ட்கள் செய்து வந்தனர்.
மேலும் படிக்க: நா காலேஜ் ஸ்டூடண்ட்.. பரவால்ல ரேட் என்னன்னு சொல்லு.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!
கிளைமேக்ஸ் போட்டோவிலும் ரேஷ்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சில காலமாக முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விட்டது என்றாலும், இதில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என்று ரேஷ்மா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.