KJ யேசுதாஸ் உடல்நிலை முற்றிலும் வதந்தி..உண்மையை வெளியிட்ட மகன் விஜய் யேசுதாஸ்.!
Author: Selvan27 February 2025, 6:37 pm
KJ யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்
பிரபல பாடகரான கே ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் காட்டு தீ போல் சோசியல் மீடியாவில் பரவியது.தற்போது இந்த செய்தி ஒரு பொய்யான வதந்தி என அவருடைய மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் அவருடைய PRO தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படியுங்க: ‘டிராகன்’ படத்தால் தெலுங்கு பட இயக்குனர் புலம்பல்…துரோகம் செய்தாரா அஸ்வத் மாரிமுத்து.!
பல தலைமுறைகளை தன்னுடைய குரலால் கட்டி போட்டுக்கொண்டிருப்பவர் கேஜே யேசுதாஸ்,இவர் பல்வேறு மொழிகளில் 50,000 க்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை இவருடைய உடல்நிலை சரியில்லை என்று செய்தி பரவியது,இதனால் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர்,அவருக்காக பிரார்த்தனை எல்லாம் செய்து வந்தனர்.
இந்த தகவலை அவரின் மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார்,இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். மேலும் அவருடைய PRO தரப்பில் இருந்து வெளிவந்த தகவலில் பாடகர் யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்,அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்,தமிழகத்தில் அவர் உடல்நிலை பற்றி பரவும் செய்தி தவறானது,அவர் தற்போது பூரண நலத்துடன் இருக்கிறார் என அவருடைய உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார்.
அவர் நலமுடன் இருக்கிறார் என்ற தகவலை மக்களுக்கு தெரிவிக்குமாறு கோரிக்கையும் வைத்துள்ளார்.