அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2024, 1:06 pm

கடின உழைப்பால் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் நடிகர் அஜித்துக்கு தனி இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் இருந்து அல்டிமேட் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

தன் மனதில் உள்ளதை பட்டென சொல்லிவிடும் அஜித், யார் பற்றியும் எந்த கவலையும் படமாட்டார். தனது ரசிகர் மன்றத்தை கலைத்த அவர், சினிமா எங்களுக்கு வெறும் தொழில்தான் தியேட்டரில் கொண்டாடுவதோடு முடிந்துவிடும் என கூறியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பலம் அதிகரித்தது.

இந்தநிலையில் நடிகர் சத்யராஜ் சென்னையில் நடந்த திராவிடம் குறித்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை சுட்டிக்கட்டி நடிகர் அஜித் பற்றி பேசினார்.

இதையும் படியுங்க: நீயெல்லாம் விஜயை விமர்சிக்கலாமா? போஸ் வெங்கட்டை விளாசிய பிரபல இயக்குநர்!

அதில், தம்பி அஜித் பைக்கில் டூர் செல்லும் போது ஒரு நல்ல கருத்தை கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான் என அஜித் சொன்னார்.

ஏதோ ஒரு நாட்டுக்கு போறோம். ஆனால் அங்கிருக்கும் மனிதர்கள் இடையே எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. எல்லாம் மதம்தான் தேவையில்லாத ஒரு வெறுப்பை உண்ணடாக்கி விடுகிறது என அஜித் ஒரு பதிவை வெளியிட்டார்.

அஜித்துக்கு என்னோட பாராட்டுக்கள், திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. வடமாநிலத்தவர் இங்கு நிறைய பேர் வருகிறார்கள், அவங்க அவங்களோட மாநிலத்துல சாதிய ஒடுக்குமுறைய அனுபவிச்சிருப்பாங்க. உயர்சாதி என்று கருதப்படுவர்கள் யாரும் இங்க வேலைக்கு வந்திருக்க மாட்டாங்க.. அவங்களுக்கு திராவிடம் என்பதை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 137

    0

    0