அண்ணன் வரார் வழிவிடு…”சிம்பு”கூட கைகோர்த்த பிரபல இயக்குனர்…அடுத்த பட அப்டேட் வெளியீடு..!
Author: Selvan18 December 2024, 2:05 pm
சிம்புவின் அடுத்த படத்தின் அப்டேட்
நடிகர் சிம்பு தற்போது முழு ஈடுபாடுடன் நடிப்பில் இறங்கியுள்ளார்.கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திவருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்று யுவன் இசை விழாவில் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்போது அவருடைய அடுத்த பட குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளிவந்த “பார்க்கிங்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வாடகை வீட்டின் பார்க்கிங் இட பிரச்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வருவதால் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தை இளம் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.தற்போது அவருடைய அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
இதையும் படியுங்க: சூரிக்கு தங்கையாக லப்பர் பந்து நடிகை…அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்..!
இதற்கு முன்னாடி நடிகர் சிவகார்த்திகேயனிடம் படத்தின் கதையை கூறி உள்ளார்.ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதால் இதில் நடிக்க மறுத்துள்ளார்.
இதனால் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை அணுகி கதையின் ஒன் லைன் சொல்லியுள்ளார்.அதனை கேட்டதும் சிம்பு ஒகே சொல்லி,முழு கதையும் ரெடி பண்ணிட்டு வாங்க என்று கூறியுள்ளார்.இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.