திரிஷா மாதிரிதானே தவிர திரிஷா இல்ல.. பிளேட்டை மாற்றி போட்ட அரசியல்வாதி..!

தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் ஒரு சமயத்தில் மிகவும் முக்கிய இடம் வகித்தது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில் தான் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அந்த பத்து நாட்களில் விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன் அந்த விடுதியை சுற்றி இருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்கு செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அப்போது தாக்கப்பட்டனர். முன்னதாக சசிகலா மட்டும் அடிக்கடி கூவத்தூர் விடுதிக்கு சென்று எம்எல்ஏக்கலை சந்தித்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார் அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும், த்ரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.

வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததை அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.

ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரிஷாவுக்கு ஆதரவாக பல பேர் இறங்கி உள்ளனர்.

இப்படியாக பரபரப்பு கிளப்பிய இந்த விஷயத்தில் திரிஷா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதையடுத்து, தற்போது அந்த அரசியல்வாதியும் பிளேட்டை மாற்றி போட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டார். நான் கூறியதை மீடியாக்கள் திரித்து போட்டு விட்டனர். வெங்கடாச்சலம் திரிஷா மாதிரி தான் சொன்னார். த்ரிஷாவை சொல்லவில்லை என அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திரைத்துறையினர் அனைவரிடத்தும் மன்னிப்பு கேட்பதாகும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், திரிஷா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதால், இவர் அப்படியே மாத்தி பேசியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருப்பினும், நடிகைகளை கிள்ளுக்கீரைகள் போல் நினைத்து இப்படி அவதூறாக பேசுபவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். திரிஷா இந்த விவகாரம் குறித்து பின்வாங்காமல் சட்டரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் வலுவாக இப்போது, இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

3 minutes ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

14 minutes ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

2 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

2 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

3 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

3 hours ago

This website uses cookies.