கொரிய நடிகருடன் பிரபாஸ் மோதல்; கல்கி முடிந்து நடக்க இருக்கும் அதிரடி சண்டை;..

Author: Sudha
7 July 2024, 3:46 pm

மா டோங் சியோக்கு தென் கொரிய நாட்டு நடிகர் ‘ரெயின் டு பூசன்’ போன்ற பல திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்து தென் கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவரானார். 2018 இல் கேலப் கொரியாவின் ஆண்டின் சிறந்த திரைப்பட நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் நடிப்பில் உருவான
“தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில்”திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது.

பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. வசூலில் சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கல்கி,சலார் படங்களில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது

இந்த திரைப்படத்தில் பிரபாஸ் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே சந்திப் ரெட்டி வங்காவின் அனிமல் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

சந்திப் ரெட்டி வங்கா – பிரபாஸ் இணையும் இந்த படத்தின் வில்லனாக தென்கொரிய நடிகர் மா டோங் சியோக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்கொரிய நடிகர் நடிப்பதால் இந்த திரைப்படம் தமிழ், ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் வெளியாகும் என தெரிகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!