வடிவேலு சம்பளத்தை பிடுங்கிக்குவாரு.. ரொம்ப மோசமானவர் : பிரபலம் பளீச்!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2025, 12:11 pm
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கிங் என்றால் கவுண்டமணிக்கு பிறகு வடிவேலுதான். அவர் பேசிய காமெடிகள் இன்றளவும் டிரெண்டாகி வருகிறது.
என்னதான் வடிவேலுவை நாம் கொண்டாடினாலும், அவருடன் நடித்த நடிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
வடிவேலுவின் உண்மை முகத்தை பலரும் வெளிகாட்டி வரும் நிலையில், பிரபல நடிகர் கொட்டாச்சி சொன்ன தகவல் மீண்டும் கோலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது.
அவர் சொன்னது, வடிவேலு ரொம்ப மோசமானவர், இது நான் மட்டும் சொல்லவில்லை, அவருடன் நடித்தவர்களே அவரை கழுவி கழுவி ஊற்றுவார்கள்.
இதையும் படியுங்க : நள்ளிரவில் திருத்தணி கோவிலுக்கு வந்த பிரபல நடிகர்… புத்தாண்டில் பக்தர்கள் சர்ப்ரைஸ்!!
தயாரிப்பாளரே வந்த எங்களுக்கு சம்பளம் கொடுத்தாலும், அதை பிடுங்கிக்கொண்டு எதுக்கு அவங்களுக்கு இவ்வளவு சம்பளம் என குறைவாக கொடுப்பார்.
ஆனால் விவேக் அப்படி இல்லை, உடன் நடிப்பவர்களுக்கு உடனடியாக தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளத்தை பெற்றுக் கொடுப்பார் என பேசியுள்ளார்.