பேய் விரட்ட கிளம்பும் நடிகர் சூரி… “கொட்டுக்காளி” ட்ரைலர் ரிலீஸ்!

Author:
13 August 2024, 2:00 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் என்ற இடத்தைப் பிடித்தவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு எண்ணிக்கை விட அதிகமாக பரோட்டா சாப்பிட்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகராக இடத்தைப் பிடித்தார் .

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் விஷால், விஜய், அஜித் என பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களுடன் நடித்து பிரபலமான காமெடி நடிகராக பலம் வந்தார். இதனிடையே அவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “கொட்டுக்காளி” இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரில் நடிகர் சூரி “எங்க வீட்டு பொண்ணுக்கு பேய் பிடிச்சியிருக்கு” என கூறி சேவல் கொண்டு சென்று பேயை விரட்டுகிறார்கள். கிராம பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் அனைவரது அனைவரது கவனத்தையும் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ:

Kottukkaali Trailer

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!