Doctor ஆக்கணும்னு ஆசைப்பட்டேன் Actor ஆகிட்டாரு.. KPY பாலா செய்த பெருமைக்குரிய விஷயம்..!(வீடியோ)

Author: Vignesh
12 February 2024, 3:00 pm

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

kpy bala

முன்னதாக, பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார்.

kpy bala

சமீபத்தில், பாலா மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியிருக்கிறார். இதைப்பற்றி பாலா பேசிய போது, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.

kpy bala

அதனால், தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோவை தொடங்குகிறோம். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இனி ஒரு உசுர கூட கஷ்டப்படக் கூடாது என்று பாலா பேசி இருந்தார். இந்நிலையில், தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன் பகுதியை சுற்றியுள்ள சிறியவர்களை படிக்க வைப்பது, ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது என நிறைய உதவிகளை பாலா செய்த வண்ணம் உள்ளார். சமூக வலைதளத்தில் பாலா செய்யும் உதவிகளுக்கு ஆதரவு குவிந்து வந்தாலும், சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், பாலாவின் அம்மா விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது, பாலாவை பற்றி பேசுயையில், இவர் பத்தாவது படிக்கும் போது 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்ததாகவும், முதல் குரூப் எடுக்க வைத்து டாக்டராகிடலாம் என்று ஆசைப்பட்ட நிலையில், அவர் ஆக்டர் ஆகிவிட்டார் என ரைமிங்கல் பெருமையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 445

    0

    0