ஏழைகளுக்காக வாழும் தெய்வம்.. ரூ.2 லட்சம் கொடுத்த KPY பாலாவுக்கு குவியும் பாராட்டு!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2024, 5:06 pm
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தாலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கு KPY பாலா நிதியுதவி
கனமழை காரணமாக நாகை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தத்ளித்தது.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
இதில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வஉசி நகர் பகுதியில் கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்து 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். இதில் 5 குழந்தை உட்பட 7 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்த்த KPY பாலா, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
#திருவண்ணாமலை நில சரிவில் பாதிகப்பட்ட குடும்பத்திற்கு தளா 50,000/- வீதம் நான்கு குடும்பத்திருக்கும் ரூபாய் 2,00,000/- வழங்கினார் KPY பாலா. pic.twitter.com/xZbTT9rKtL
— Rajini (@rajini198080) December 8, 2024
எத்தனையோ பிரபலங்கள் மத்தியில் பேருதவி செய்யும் kpy பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.