மனம் நிறைந்தது.. விரல் உடைந்தது.. KPY பாலா வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ..!

Author: Vignesh
16 December 2023, 9:39 am

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா.

மிகவும் திறமையாக வளர்ந்து வரும் நடிகரான பாலா தான் சம்பாதித்த பணத்தை நிறைய இயலாதவர்களுக்கும் முடியாதவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.

மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளார் பாலா. இதை அவர் தனது சொந்த பணத்தின் மூலமாக வழங்கினார். பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டினர். இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவியிருக்கிறார் பாலா.பெரிய நடிகர்களே உதவிகள் செய்ய இன்னும் முன்வராத நேரத்தில் KPY பாலா செய்துள்ள இந்த உதவி பலரையும் வியக்க வைத்துள்ளது.

kpy bala

இதனிடையே, தற்போது பாலா தனது விரல்கள் உடைந்துவிட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். “மனம் நிறைந்தது…. விரல் உடைந்தது…. நன்றி” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!