என்னை வாழவைத்த தெய்வம் சென்னை… ATM’ல் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து உதவிய பாலா!

Author: Rajesh
7 December 2023, 6:53 pm

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா.

மிகவும் திறமையாக வளர்ந்து வரும் நடிகரான பாலா தான் சம்பாதித்த பணத்தை நிறைய இயலாதவர்களுக்கும் முடியாதவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.

மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளார் பாலா. இதை அவர் தனது சொந்த பணத்தின் மூலமாக வழங்கினார். பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டினர். இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவியிருக்கிறார் பாலா.

அதன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய ATM’ல் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து மக்களுக்கு உதவினேன். கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம் பணம் உதவி செய்துள்ளேன். என்னை வாழவைத்த தெய்வம் சென்னை… நான் முதன்முதலில் சென்னை வந்து இறங்கியது இந்த அனகாபுத்தூர் தான். அதனால் என்னை வாழவைத்த மக்களுக்கு நான் முடிந்த உதவியை செய்துள்ளேன் என கூறினார். இதை கேட்ட பலருக்கும் உடல் சிலிர்த்துவிட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ