ஒரு உசுரு கூட இனிமேல் போகக்கூடாது.. நிஜ வாழ்க்கையில் ஹீரோவான KPY பாலா..!
Author: Vignesh13 January 2024, 11:46 am
விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பாலா மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியிருக்கிறார். இதைப்பற்றி பாலா பேசிய போது, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.
அதனால், தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோவை தொடங்குகிறோம். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இனி ஒரு உசுர கூட கஷ்டப்படக் கூடாது என்று பாலா பேசியுள்ளார்.