பிளாட்பாரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி – KPY பாலாவின் தரமான செயல்!

Author:
29 July 2024, 10:35 am

திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களைத் தூக்கி விட்டு அழகு பார்ப்பதில் விஜய் தொலைக்காட்சி எப்போதுமே மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வெற்றி பெற்றவர்தான் KPY பாலா.

kpy bala

அந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளமும் ஏற்பட்டது. மேலும் இவர் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஜூங்கா,. தும்பா , புலிகுத்தி பாண்டி ,லாபம் , நட்பு , நாய் சேகர், ஆரம்பம், ரன் பேபி ரன். உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே கே பி ஒய் பாலா, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இருசக்கர வாகனத்தை சர்ப்ரைஸ் ஆக கொடுப்பது, மற்றும் மலைவாழ் மக்களுக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது இப்படி பல உதவிகளை செய்து மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரமாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது KPY பாலா செய்துள்ள ஒரு சம்பவம் தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாருடன் பிளாட்பாரத்தில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

kpy bala

இதனை அறிந்த KPY பாலா அந்த கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர் தங்கி இருந்த பிளாட்பார்ம் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டிய மொத்த பணத்தையும் கையில் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். அவரின் இந்த உயர்ந்த மனதை பலரும் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 165

    0

    0