விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார்.
சமீபத்தில், பாலா மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியிருக்கிறார். இதைப்பற்றி பாலா பேசிய போது, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.
அதனால், தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோவை தொடங்குகிறோம். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இனி ஒரு உசுர கூட கஷ்டப்படக் கூடாது என்று பாலா பேசி இருந்தார். இந்நிலையில், தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன் பகுதியை சுற்றியுள்ள சிறியவர்களை படிக்க வைப்பது, ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது என நிறைய உதவிகளை பாலா செய்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பாலா செய்யும் உதவிகளுக்கு ஆதரவு குவிந்து வந்தாலும், சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர். இது குறித்து பாலாவிடம் கேட்டபோது, இப்படியே உதவிகள் செய்தால் நீ சிக்னலில் பிச்சைதான் எடுப்ப அப்ப கூட நான் பிச்சை போடாமல் தான் போவேன் என பதிவிட்டு வருகின்றனர். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அந்த சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் வரும்போது அது எனக்கு சந்தோஷம் என்னால் முடிந்தவரை கொடுப்பேன் எதிர்காலம் என்னை காப்பாற்றும் என்று பேசியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.