விஜய் கட்சியில் இணைகிறாரா KPY பாலா? த.வெ.க மாநாட்டில் பங்கேற்க மும்முரம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 12:40 pm

விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் KPY பாலா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KPY பாலா, மற்றும் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா:- குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் குறைந்து வருவதாக குறித்த கேள்விக்கு, நான் கடந்த இரண்டு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. ஆகவே அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என கூறினார்.

இதையும் படியுங்க: நடிகை தமன்னா விரைவில் கைது? அமலாக்கத்துறை விசாரணையில் கிடுக்குப்பிடி.. என்ன நடந்தது?

படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகின்றன ஆனால் இன்னும் துவங்கப்படவில்லை துவங்கும்போது அறிவிக்கிறேன் என கூறினார்.

பாலா தொடர்ந்து உதவிகள் செய்வது குறித்த கேள்விக்கு, நிறைய உதவிகள் செய்ய ஆசை உள்ளது உதவிகளை சொல்லிவிட்டு செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, செய்துவிட்டு சொல்லும் சாதாரண ஆள் நான் என பேசினார்.

தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு, மாநாடு குறித்து பேசும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை நான் சாதாரண ஆள் எனக்கு பேச வயதுமில்லை தகுதியும் இல்லை அறிவும் இல்லை, விஜய் மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் என பேசினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!