என் Account-ல இவ்ளோ தான் இருந்துச்சு.. பாவா லக்ஷ்மணனுக்காக KPY பாலா செய்த நெகிழ்ச்சி செயல்..!
Author: Rajesh18 June 2023, 6:58 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாவா லக்ஷ்மணன். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர். ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.
மிகவும் வறுமையில் இருக்கும் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மயில்சாமி, விவேக், சிங்கமுத்து, மனோ பாலா போன்ற நடிகர்கள் செய்து வந்த உதவியால் இத்தனை உயிர் பிழைத்து வந்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டு இருக்கிறது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் டிவி KPY பாலா மருத்துவமனையில் இருக்கும் பாவா லக்ஷ்மனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அவர் கையில் 30 ஆயிரம் ருபாய் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
‘உங்களுக்கு ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் அக்கவுன்ட்டில் 32 ஆயிரம் ரூபாய் தான் இருந்தது. அதனால் தான் இதை கொடுத்தேன். தப்பா நெனச்சிக்காதீங்க’ என பாலா பாவா லக்ஷ்மணனிடம் கூறியுள்ளார்.