விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
குறிப்பாக CWC நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அண்மையில், கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது. அண்மையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தன் அப்பா, அம்மா, அண்ணனுடன் தனியார் youtube சேனலுக்கு புகழ் பேட்டி கொடுத்திருந்தார். அதில் சிறிய வயது முதல் புகழ் பல கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறான். அப்படி கஷ்டத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சேலை கட்டி நடிக்கும் போதெல்லாம் என் உறவினர்கள் கிண்டல் செய்து விமர்சிப்பார்கள். ஆனால், அந்த சேலையை கட்டி நடித்து அவர்கள் என் வீடு தேடி வரும் அளவிற்கு இப்போது புகழ் வளர்ந்திருக்கிறான். புகழ் வருகிறான் என்றாலே என் வீட்டுக்கு கூட்டம் தேடி வந்து விடுவார்கள்.
கோயில் திருவிழாவிற்கு 10 நிமிடம் வந்து எம்ஜிஆர் ராதாரவி போல பேசியதும் போலீஸ்காரர்களே அவனுடன் புகைப்படம் எடுத்தார்கள். என் மகன் தப்பான விஷயம் செய்து எந்த பெயரும் வாங்கியதில்லை. ஏனென்றால், சின்ன வயதிலிருந்து கஷ்டம் தான். அவன் அப்பா ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால், இரண்டு பிள்ளைகளுமே சம்பாதிக்க படிப்பை முடித்து சம்பாதித்தார்கள்.
கடலூரில் கட்டிய வீட்டை இடித்தார்கள். அதன் பின்னர், எங்க ஊரில் வீட்டைக் கட்டி எங்களுக்கு கொடுத்தான். சின்ன வயதில் இருந்தே கஷ்டம் தான் அனுபவித்திருக்கிறான். இப்போது, தினமும் விமானத்தில் பறக்கிறான். அவனால் நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம். என்னை இப்போது கடலூரில் கௌரவமாக வாழ வைத்திருக்கிறான்.
சிறு வயதில் என்னிடம் அம்மா நீ செத்து போயிட்டா நானும் உன் கூட செத்துப் போய்டுவான் என கேட்பேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று புகழ் அம்மா கூறியிருக்கிறார். மேலும், யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி செய்திருக்கிறான். பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறான். யாருக்கும் தெரியணும்ங்கற அவசியம் இல்லை. தெரிந்தால் என்ன நடக்கப் போகிறது எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று புகழின் அம்மா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.