NO சொன்ன ஜான்வி.. பிரதீப்-க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி ரீல் மகள்.. தொடங்கிய LIC ஷூட்டிங்..!

Author: Vignesh
15 December 2023, 1:15 pm

தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். தனது 20 வயதிலே கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று ஹிட் இயக்குனராக முத்திரைகுத்தப்பட்டார்.

இவரது படங்களில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பது போன்று முழு முழுக்க காமெடி ஜானரில் படமெடுத்து வித்யாசம் காட்டுவதே பிரதீப்பின் ஸ்டைல். இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. லவ் டுடே எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

அந்த படத்திற்கு பின்னர் நிறைய டாப் ஹீரோக்களின் படங்களை இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படித்தான் விஜய்யை வைத்து படம் இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு வீடு தேடி வந்ததாம். ஆனால், அவர் விஜய்யை வச்சியெல்லாம் படமெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அவருக்கு போட்டியாக பெரிய ஹீரோவாகுவதே என் கனவு.

அதனால் நானா இப்போதைக்கு ஹீரோவாக நடித்து நம்பர் ஒன் ஹீரோவாகவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன் என கூறி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். எனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதியப்படமொன்றில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

lic

அதன் பின்னர் நடிகை நயன்தாரா பிரதீப்பின் அக்காவாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், எல்ஐசி (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று துவங்கப்பட்டுள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் எஸ் ஜே சூர்யா முக்கிய ரோலிலும் நடிக்க உள்ளார். மேலும், பிரதீப்பிற்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பண்ணா படத்தில் அவருக்கு மகளாக நடித்த 20 வயதான நடிகை கீர்த்தி செட்டி நடிக்க உள்ளாரார். இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி செட்டி கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!