அந்த மாதிரி கேள்வி கேட்டு டார்ச்சர் கொடுத்த ரசிகர்.. புகைப்படத்தோடு பதில் கொடுத்த நடிகை கிருத்திகா..!

Author: Vignesh
29 December 2023, 12:30 pm

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார்.

krithika (1) - updatenews360

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடிகை கிருத்திகா நடித்து இருந்தார்.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர், அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தும் வருகிறார்.

Krithika Annamalai - updatenews360

சமீபத்தில் அடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகன் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 கிலோ எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். மேலும், தனக்கு ஒரு மகன் இருப்பதால் யாராவது தந்தை பற்றிய விவரமும் கேட்டால் அவன் மனம் கஷ்டப்படும்.

ஆனால், தற்போது அந்த கவலை இல்லை என்றும், தனது அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து வழிநடத்தி வருவது வருவதாகவும், தன்னுடைய அண்ணனுக்கு தன் மகனை தத்து கொடுத்து இருப்பதாகும். அதனால், தனக்கு எந்த கவலையும் தற்போது இல்லை என்று கிருத்திகா தெரிவித்து இருந்தார்.

krithika annamalai

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர், தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு கிருத்திகா தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, இது என் மகன் ப்ரோ.. என்று கூறி பதிலளித்துள்ளார்.

kiruthika annamalai
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0