50 பேருக்கு முன் அசிங்கமா அப்படி செஞ்சிட்டாரு… டாப் நடிகையின் பேட்டியால் அதிர்ந்துபோன பாலிவுட் திரையுலம்!

Author: Shree
7 September 2023, 9:29 pm

பிரபல பாலிவுட் நடிகையான கிருத்தி சனோன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் முன்னதாக மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாக வந்தார். இவர் அதிபுருஷ் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ பிரபாஸை காதலித்து வருகிறார். அதை பிரபாஸ் மறைமுகமாக கூட கூறியிருந்தார்.

மிகவும் ஒல்லியான தோற்றத்தில் கச்சிதமான அழகில் இருக்கும் நடிகை கிருத்தி சனோன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். அண்மையில் கூட அவர் நடிப்பில் வெளியான மிமி என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அந்த மகிழ்ச்சியின் மிதப்பில் இருக்கும் கிருத்தி சனோன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் தான் இருந்தேன். அப்போது அது என்னுடைய முதல் ramp walk. என்னுடைய ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது, அதை பார்த்து அந்த ஷோவின் choreographer என்னை திட்டிவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அசிங்கப்பட்டது போன்று உணர்ந்து அழுதுவிட்டேன். அதற்கு பிறகு நான் அந்த choreographer உடன் பணியாற்றவில்லை’ அவரின் முகத்தில் கூட முழிக்கக்கூடாது என கிருத்தி சனோன் கூறி இருக்கிறார். பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் கிருத்தி சனோன் இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ