90 மற்றும் 2000 காலகட்டங்களில் ஆரம்பங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இயக்கி பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டவர் தான் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனராக பார்க்கப்பட்ட இவரது இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் புரியாத புதிர்.
அதை அடுத்து சேரன் பாண்டியன் , ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், முத்து , அவ்வை சண்முகி, படையப்பா, மின்சார கண்ணா, வரலாறு, தசாவதாரம் ,ஆதவன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார் கே எஸ் ரவிக்குமார் .
தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியும் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கே எஸ் ரவிக்குமார் அஜித் குறித்து பேசி பேசி விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகிறது.
அதாவது அஜித்தும் ஏ ஆர் ரகுமானும் ஒரே மாதிரியான கேரக்டர். இவங்க ரெண்டு பேருக்குமே யாருக்கும் பயந்து பதில் சொல்லணும் என்று அவசியமே கிடையாது. யாருக்கும் அவங்க ரெண்டு பேரும் சலாம் வைக்க மாட்டாங்க. ஜால்ரா அடிக்க மாட்டாங்க இந்த மாதிரி விஷயத்தில் ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்.
அவங்க வேலை என்னவோ அதை மட்டும் தான் பார்ப்பாங்க. என்னோட அனுபவத்தில் நான் அவர்களுடன் பழகிய வரைக்கும் ரெண்டு பேருமே ஒரே மாதிரி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த ஜென்டில்மேன் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி கேட்டு ரசிகர்கள் உண்மையிலேயே நீங்கள் சொல்வது சரிதான்… அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என பார்த்து பல வெற்றிகளை குவித்தவர்கள் இந்த பிரபலங்கள் என கூறி வருகிறார்கள்.