தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.
இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த படமாக உள்ளது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது கெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த நிலையில், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் படையப்பா படப்பின் போது நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், படையப்பா படத்தில் ஒரு ஊஞ்சல் காட்சி வரும். ரஜினி தன்னுடைய துண்டால் ஊஞ்சலை கீழே இறங்கி விடுவார். அந்தக் காட்சிகள் எடுக்கும்போது பத்துக்கும் மேற்பட்ட டேக்குகள் ரவிக்குமார் எடுத்தாராம். அந்த காட்சி எடுக்கும்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்களாம்.
இப்படி பல போராட்டங்களுக்குப் பின் அந்த காட்சியை ஒருவழியாக எடுத்த முடித்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.
மேலும், படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ் என்று தெரிவித்துள்ளார். ஒன்று மாடு குத்த வரும், நீலாம்பரியை படையப்பா காப்பாற்றியதால், நீலாம்பரி திருந்தி ரஜினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது மற்னொன்று நீ கொடுத்த உயிர் பிச்சையில் வாழ முடியாது என நீலாம்பரி தன்னைத்தானே சுட்டுக் கொள்வது.
இதனிடையே, முதல் கிளைமாக்ஸை வைக்கலாம் என்று கேஸ் ரவிக்குமார் சொன்னதும், ரஜினி மறுத்து 2ம் கிளைமாக்ஸை வைக்கலாம் என்று கூறிவிட்டாராம்.
இதை வைத்தால் உங்கள் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த படத்தில் வில்லி மாஸ் ஆகி விடுவார் என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தும், வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், ரஜினி வற்புறுத்தியதன் பேரில் அந்த கிளைமாக்ஸ் வைக்கப்பட்டது எனவும், தற்போது இதுதான் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்திருக்கிறது என கே எஸ் ரவிக்குமார் உருக்கத்துடன் பேசி உள்ளார்.
மேலும் சிவாஜி கணேசன் நடித்தது பற்றி சில தகவல்களை கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். படத்தில் தம்பிக்கு சொத்தை கொடுக்கும் காட்சியில் பத்திரத்தில் குடும்பத்துடன் சிவாஜி கையெழுத்து போடுவது ரஜினி, லட்சுமி அமைதியாக இருந்தது. சித்தாரா வரும்போது, தலையை தொடும்போது கேமரா உங்ககிட்ட வரும் சார் அப்போ உங்க கண்ணுல தண்ணி வரணும் என்று கூறியதாகவும், அதற்கு சிவாஜி பையன் மனைவி கையெழுத்து போடும்போது அழல சித்தாரா கையெழுத்து போடும்போது ஏன் நான் அழனும் என்று தன்னிடம் கேட்டதாகவும், நீ நடிச்சு காமி என்று சொன்னதும் நடித்து தான் காட்டியதாகவும், அதற்காக இவன் டைரக்டர் மட்டுமல்ல நடிகன்னு சொன்னதாக கூறியது தனக்கு ஆஸ்கார்னு நினைத்ததாக கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று படையப்பா படத்தில் பல கலவரங்கள் நடந்து உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.