குடும்பங்கள் கொண்டாடும் குடும்பஸ்தன்…நாளுக்கு நாள் கல்லா கட்டும் படத்தின் வசூல்..!
Author: Selvan28 January 2025, 2:02 pm
வசூல் வேட்டையில் மணிகண்டன்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக சிறு பட்ஜெட் மற்றும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.அந்த வகையில் கடந்த வாரம் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: கெளதம் மேனனின் முதல் காதல்…அப்போ அந்த படம் இவரோட நிஜ ஸ்டோரியா…ரசிகர்கள் ஷாக்..!
இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார்,ஏற்கனவே இவருடைய நடிப்பில் வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகாரித்தது.

படம் வெளியான முதல் நாளில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படத்தில் மணிகண்டனுடன்,குரு சோமசுந்தரம்,சான்வி மோகனா,சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் மணிகண்ணடன் வேறு ஒரு ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு,தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் மணிகண்ணடன் பார்த்து வந்த வேலையும் போய்விட்டது,இதனால் வெளியில் வட்டிக்கு வாங்கி வீட்டில் சம்பளத்தை கொடுத்து வருகிறார், அவருக்கு வேலை இல்லை என்பதை தெரிந்துகொண்ட அவருடைய குடும்பம் அவரை எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறது,அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை ரொம்ப அற்புதமாக இயக்குனர் காட்டி இருப்பார்.
பல இளைஞர்களின் வாழ்க்கை மணிகண்டனின் வாழ்க்கையோடு ஒத்து போவதால் குடும்பங்கள் மட்டுமின்றி பல இளைஞர்களும் படத்தை தியேட்டரில் கண்டு கொண்டாடி வருகின்றனர்.சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான முதல் நாளே ஒரு கோடி வசூலை பெற்றது.தற்போது வரை குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் 7.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வரக்கூடிய நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது