கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?
Author: Udayachandran RadhaKrishnan3 April 2025, 5:41 pm
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும் வசீகரித்தது.
இதனால் இவர் பிரபலமானார். கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடுகிறோரோ இல்லையோ, மோனலிசாவுடன் போட்டோ பதிவிட்டு வைரலாக்கினர்.
இதையும் படியுங்க: 96 படம் போல நடந்த மீட்டிங்.. மனைவிக்கு துளிர் விட்ட கள்ளக்காதல் : 3 உயிர்களை பறித்த உல்லாசக் காதல்!
இதையடுத்து அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாகவே தேடி வந்தது. மோனாலிசாவின் வீடு தேடி பட வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா.
தொடர்ச்சியாக இயக்குநருடன் படப்பிடிப்புக்கு செல்வது, விமானத்தல் சென்ற வீடியோக்கள் புகைப்படங்கள் வைரலானது. ஆனால் இதெல்லாம் வெறும் கனவு போல சில நாட்களிலேயே சுக்குநூறானது.
இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறினார். டிக் டாக் பிரபலமான அந்த பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த செய்தி அறிந்ததும், நொந்து போனார் மோனாலிசா. அதிர்ச்சியடைந்த அவர் திரும்பி தனது வீட்டுக்கு வந்த குடும்பத்தாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
ஆனால் போலீசோ, இயக்குநர் சனோஜ், எத்தனை பெண்களை இது போல ஏமாற்றியுள்ளார் என துருவி துருவி விசாரணை நடத்தி வருவதால், மோனாலிசாவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.