‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’ பட நடிகையை ஞாபகம் இருக்கா?.. எவ்வளோ ஸ்டைலிஷா இருக்காங்க..!

Author: Vignesh
4 March 2024, 5:01 pm

தமிழ் சினிமாவில் கடத்த 2009 ஆம் ஆண்டு வெளியான குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தனன்யா. இப்படம் ஓரளவிற்கு தனன்யாவுக்கு ரசிகர்களை கொடுத்தது என்று சொல்லலாம். இப்படத்தில் வரும் சின்னஞ்சிறுசு பாடல் இவரை மிகவும் பிரபலம் ஆக்கியது.

thananya

திரைப்படத்தில் அறிமுகமாகும் போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இவருக்கு, முதல் படம் ஓரளவுக்கு ரீச் ஆக பின்னர் பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இதனால், தனன்யா தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு மருத்துவ படிப்பில் மூழ்கி விட்டார். பின்னர், ஆள் அடையாளம் தெரியாமல் எங்கப்பா தனன்யா என்று ரசிகர்கள் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

thananya

பின்னர், படிப்பை முடித்துவிட்டு வெயிலோடு விளையாடு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால், மீண்டும் தனது மருத்துவ படிப்புக்கு தனன்யா சென்று விட்டார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு மருத்துவராகவும், குடும்ப தலைவியாகவும் தற்போது இருந்து வருகிறார்.

thananya

பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சோசியல் மீடியாக்களில் ஆர்வமாக புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். கலர்ஃபுல் புடவை ஸ்டைலிஷ் ஆன உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது, சமூக வலைதளத்தில் இந்த புகைப்படங்கள் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

thananya
  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 262

    0

    0