நயன்தாராவால் ஏமாற்றப்பட்டோம்.. மீனாவுக்கும் குஷ்பூவுக்கும் நடந்த ‘அந்த’ விஷயம்..!

Author: Vignesh
15 July 2024, 12:49 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர். முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

annaatthe

மேலும் படிக்க: சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா?.. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வசூல்..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குஷ்பூ சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறிய போது அண்ணாத்த படத்தில் நடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா என்னிடமும் மீனா விடமும் கதை சொல்லும் பொழுது படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறினார். நீங்கள் இருவரும் முறை பெண்கள் அவர் மீது ஆசைப்பட்டு அது நடக்காமல் போய்விட்டது. பின் அவருடைய தங்கை காணாமல் போக நீங்களும் அவருடன் சேர்ந்து தேடுவது போன்ற கதை என்று கூறி இருவருக்கும் அதிக முக்கியத்துவம் என்று சொன்னார்.

annaatthe

மேலும் படிக்க: முன்னாள் காதலுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்?.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!

ஆனால், திடீரென்று இந்த கதைக்குள் நயன்தாராவை சேர்த்து படக்குழுவினர் எனக்கும் மீனாவுக்கும் சாதாரண கேரக்டர் போன்று கதை எழுதப்பட்டது. நானும் மீனாவும் கதை இப்படி மாறியதை பற்றி பேசிக்கொண்டோம். ஆனால், ரஜினிக்காக அந்த படத்தை நடித்துக் கொடுத்துவிட்டு போவோம் என்று இருவரும் முடிவு எடுத்து நடித்தாக குஷ்பூ தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா இங்கேயும் உங்களோட வேலையை காட்டிட்டாங்களா என்று கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 156

    0

    0