குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!

Author: Selvan
18 November 2024, 7:53 pm

சுந்தர் சி தொடர் ஹிட் படங்கள்

நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பலவித திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் சுந்தர் சி.

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 பாகத்தை இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

பார்ட் பார்ட் ஆக படம் எடுப்பதில் கில்லாடியான சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கலகலப்பு 3 அப்டேட்

ஏற்கனவே கலகலப்பு,கலகலப்பு 2 படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் சுந்தர் சி.இந்நிலையில் கலகலப்பு 3 படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் என்பவருடன் இணைந்து குஷ்பூவின் அவ்னி சீனி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்க: நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?

இப்படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் 2025 ஆம் ஆண்டு இப்படம் திரையில் வரும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் கண்ணன் தமிழில் சாந்தனு நடித்த “ராவணக் கோட்டம்” திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ