ரஜினி கூட நடிக்க வைச்சு என்னை ஏமாத்திட்டாங்க : நடிகை குஷ்பு வருத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2025, 4:49 pm

நடிகை குஷ்பு 80ஸ் மற்றும் 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தார்.அப்போதை முன்னணி நடிகர்களுடனும், அஜித், விஜய் என அனைத்து கால கட்டங்களில் உள்ள நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றவர்.

தொடர்ந்து சினிமாவில் அவரது பயணம் இருந்தாலும், அரசியலிலும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

Kushboo Disappoint With Annathe Movie with Rajini

இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்து, தனது கணவரின் இயக்கத்தில் உருவான பல படங்களை தயாரித்து வெற்றியும் கண்டு வருகிறார்.

இதையும் படியுங்க: மலேசியாவில் சில்மிஷம்.. நடிகை மீனா உயிரோட இருக்க காரணமே அந்த நடிகர்தான்!

தற்போது அவர் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நான் இன்னொரு ஹஅராயின் என என்னையும், மீனவையும் நடிக்க வைத்தனர்.

ஆனால் டப்பிங் பணிகளின் போதுதான், நான் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டேன் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன்.

Kushboo Disappointed with annaatthe Movie

முதலில் இயக்குநர் சொன்ன கதை வேறு. பின்பு தான் இன்னொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என என்னை நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு மாற்றிவிட்டனர். ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாற்றியதை பின்புதான் உணர்ந்து ஏமாந்துபோனேன் என கூறியுள்ளார்.

  • Sivakarthikeyan career growth அமரனுக்கு பிறகு தலைக்கனத்தில் ஆடும் சிவகார்த்திகேயன்…பிரபலம் பரபரப்பு பேட்டி..!
  • Views: - 108

    0

    0

    Leave a Reply