இவன்லாம் ஒரு ஹீரோவா.. விஜயகாந்தை அசிங்கப்படுத்தியதால் சண்டைக்கு போன குஷ்பூ..!
Author: Vignesh13 July 2024, 11:48 am
மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார். இதனிடையே, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலை காலமானார்.
பொதுவாக, திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
மேலும் படிக்க: சாப்பாடு விஷயத்தில் கடுப்பாக்கிய வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு Nosecut செய்த பிரியங்கா..!
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க: பிரபல நடிகையால் சுந்தர் C குடும்பத்தில் வெடித்த சண்டை.. கடுப்பில் கத்திய குஷ்பூ..!
இந்நிலையில், நடிகை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில், இந்தி திரை உலகில் இருந்து சிலர் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் கடுமையாக பந்தா செய்து கொண்டிருந்தார்கள். பலமுறை அவர்கள் தங்கி இருந்த ஒட்டலில் விஜயகாந்த்தும் நானும் ஒரு விஷயமாக சென்றிருந்தோம். அப்போது, விஜயகாந்தை பார்த்த சிலர் இவனெல்லாம் ஒரு ஹீரோவா என்று ஹிந்தியில் நக்கல் செய்தவாறு சிரித்தார்கள். விஜயகாந்த் உட்கார ஒரு நாற்காலி கூட போடவில்லை. இதனை பார்த்த நான் அவர்களிடம் சண்டைக்கு சென்றேன். நமக்கு காரியம் தான் முக்கியம் அமைதியாக இரு என்று என்னை அவர் கட்டுப்படுத்தி விட்டார். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேள் என கூறி பிரச்சனையை சுமூகமாக கையாண்டதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.