அர்ஜூனுடன் நெருக்கமான உறவில் இருந்த குஷ்பு… வாழ்க்கை கொடுத்ததே அவங்க தானாம்!
Author: Rajesh7 December 2023, 3:41 pm
தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருபவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜெயராமன், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சி-க்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
குஷ்பு நடிகர் பிரபுவை உருகி உருகி காதலித்து வந்தது ஊரறிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜியின் எதிர்ப்பால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் குஷ்பு குறித்த ஒரு தகவல் கிடைத்துள்ளது. குஷ்புவும் நடிகர் அர்ஜூனுடன் நண்பர்கள் முறையில் நெருக்கமாக பழகிவந்தார்களாம். அதாவது, குஷ்பு முதன்முதலில் நடித்தது அர்ஜுன் உடன் தான் என்பதால் அவர் மீது ஒரு செண்டிமெண்ட் உள்ளதாம்.
அப்படித்தான் ஒரு கட்டத்தில் அர்ஜுன் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்த நேரம் அது அப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தாராம். ஆனால், அப்படத்தை தயாரிக்க யாருக்கும் முன் வரவில்லையாம். ஒருவர் நேரடியாகவே உங்கள் மார்க்கெட் சரிந்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் உங்களின் படத்தை தயாரிப்பது என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.
ஒரு யோசனை சொல்கிறேன். உங்களின் தோழி குஷ்பு தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். அவரை ஹீரோயினாக போட்டு அவருடன் நடித்தால் படம் ஓடும். எனவே நீங்கள் குஷ்புவின் கால்ஷீட் வாங்கிக்கொடுத்தால் நான் படத்தை தயாரிக்க ரெடி என்றாராம். அர்ஜுனும் தயக்கத்துடன் சென்று குஷ்புவிடம் கேட்க குஷ்பு அர்ஜுன் உடனான நட்பால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அப்படி அர்ஜுன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் சேவகன். அந்த திரைப்படத்திற்கு பின்னர் அர்ஜுனின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தொட ஆரம்பித்ததாம். எனவே பாதாளத்தில் சறுக்கி விழுந்த அர்ஜுனின் திரை வாழ்க்கையை மீட்டு கொடுத்ததே குஷ்பு தானாம்.