பொது இடம்னு கூட பாக்காம அப்படி பண்ணாங்க… கூச்சமில்லாமல் அட்ஜெஸ்ட் செய்த குஷ்பூ..!
Author: Vignesh10 May 2023, 3:00 pm
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.
இயக்குனர் சுந்தர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் “முறை மாமன்” என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சித்ராலட்சுமணன் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். குஷ்பூவுக்கு வயசாகிடுச்சுன்னு வருத்தப்பட்ட முதல் ஆள் நான் தான் என்றும், அந்தம்மா தன்னுடன் 9 படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக, எட்டுப்பட்டி ராஜா படத்தின் போது, ஒரு நாள் அவுட்டோரில் 5 மணிக்கு மேல் ஆனதாகவும், அப்போது, அங்கு சுத்தி எந்த மரமும் கிடையாது என்றும், அங்கு ஆடையை மாற்றி நடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மாலை நேரமாச்சி லைட்லாம் குறைஞ்சிட்டே இருக்குன்னு தான் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்த குஷ்பூ, தன்னிடம் வந்து என்ன ஆச்சி என்று கேட்டார்.
உடை மாத்தி எடுக்கன்னும் என்று கூறியதும் உடை தானே மாத்தனும்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு சேலையை அசிஸ்டண்ட்டிடம் கொடுத்து விரிக்கச்சொல்லி டக்குன்னு மாத்தினாங்க எனவும், பின்னர் படத்தின் காட்சிகளை எடுத்து முடித்தோம் என்று தெரிவித்து இருக்கிறார். அப்படி குஷ்பூவை போல் அதை இப்போது யாராவது செய்வாங்களா என்று கேள்வி எழுப்பினார்.