குஷ்பு மகன் திடீர் மரணம்… மனவேதனையுடன் இரங்கல் தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

Author: Shree
27 April 2023, 3:42 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது திடீரென குஷ்பு வீட்டில் எதிர்பாராத மரணம் ஒன்று நேர்ந்துள்ளது.

ஆம், குஷ்பு வீட்டின் மனுஷ பிறவியில் பிறக்காத மகனை போன்று ஒரு pet dog வளர்த்து வந்துள்ளனர். அந்த செல்ல நாயின் பெயர் கூட ஸ்னூபி சுந்தர் என மகனை போன்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்துள்ளனர். இந்நிலையில் திடீரென அது மரணித்துள்ளதை குஷ்பு மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இது குறித்து பதிவிட்டுள்ள குஷ்பு, “நீங்கள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் எங்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வந்தீர்கள், ஆனால் எங்கள் இதயத் துடிப்பாகிவிட்டீர்கள். உங்கள் புரிதல், நிபந்தனையற்ற அன்பு, உங்கள் புன்னகை, சில சமயங்களில் கோபம், பாதுகாக்கும் இயல்பு மற்றும் மிகவும் கீழ்ப்படிந்த இயல்பு ஆகியவை இதயத்தை உருகச் செய்தன. நீங்கள் எங்களை மனவேதனைக்குள்ளாக்கி விட்டீர்கள். நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஸ்னூபியை நாங்கள் மிஸ் செய்வோம். உன்னை போல் யாரும் இருக்க முடியாது. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 12141

    61

    193