நான்கு ஆண்களுக்கு மத்தியில் அதை செய்தேன்.. கூச்சமின்றி கூறிய குஷ்பூ..!

Author: Vignesh
4 July 2024, 11:31 am

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Kushboo - Updatenews360

சமீபத்தில், அளித்த பேட்டியொன்றில் சினிமாத்துறையில் தான் பட்ட சில கசப்பான சம்பவங்களை குஷ்பூ வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போ எல்லாம் இப்போது இருக்கும் கேரவேன் எல்லாம் கிடையாது. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு தயாராக உடைகளை மாற்ற நம்முடன் இரு லைப் மேன்கள் இரு ஒப்பனை கலைஞர்களை அனுப்புவார்கள். நான்கு பேரும் கையில் ஒரு பெரிய துணியை வைத்து என்னை மறைத்துக் கொள்வார்கள்.

kushboo - updatenews360

நான் உள்ளே ஆடையை மாற்ற என்னை சுற்றி நான்கு பேர் இருந்தாலும் எனக்கு பயம் இல்லை ஏனென்றால், அவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கைதான். அப்போது, செல்போன் கிடையாது என்பதால் பயமில்லை. ஆனால், இப்போது பயம் இருக்கிறது. மேலும், அம்பாசிடர் காருக்குள் சென்று தான் துணியை மாற்றுவோம். கார் முழுவதும் துணியால் மூடப்பட்டு கார் டிரைவர் வெளியில் நின்று யாரையும் இந்த பக்கம் வராமல் தடுப்பார். அந்த நம்பிக்கைதான் நிம்மதியாக பணியாற்ற உதவியாக இருக்கும். இன்றைக்கு கேரவேன் வந்தாலும், முந்தைய காலத்தில் இதுபோன்று சூழ்நிலையை சந்தித்ததால் தான் இப்போது கேரவேன் வந்துள்ளது என்று நடிகை குஷ்பூ பேசியுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!