கைய புடி, கண்ண பாரு – விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமா நின்னு குட் நியூஸ் சொன்ன சமந்தா!

Author: Shree
23 March 2023, 5:49 pm

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.

இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது விஜயதேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்ய வேண்டிய இப்படம் சமந்தா சிகிச்சை எடுத்து வந்ததால் தள்ளிப்போடாட்டது.

இந்நிலையில் தற்போது புதிய போஸ்டருடன் குஷி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…