சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.
கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் சீண்டல்களை கொடுப்பதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
ஆனால், கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இன்னும் பிரச்னைக்கு தீர்வு வரவில்லை.
இந்த பிரச்சனை அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம்,சம்மந்தப்பட்ட பேராசியர்களுக்கு ஆதரவாக பேசி மாணவர்களை பொய் சொல்லுவதக குறை கூறினார்.
இதனால் அபிராமி மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதுகுறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், கலாஷேத்ரா ஹரி பத்மன் சார் பற்றி இப்படி புகார் வந்த போதே, ஒரு மாணவி சார் கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும், நீங்கள் கொஞ்சம் உறுதியாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் மெசேஜ் அனுப்பிவிட்டு பின்னர் போராட்டத்தில் அதே பொண்ணு முன்னாடி நின்னு We Want Justice என கத்தி கூச்சலிட்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த ஆடியோ ஆதாரம் ஒன்றையும் அபிராமி அந்த பேட்டியில் காட்டியுள்ளார்.
இதுகுறித்து நடிகை குட்டி பத்மினி பேட்டியொன்றில் கூறுகையில், நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது சாதாரணமாக இருக்கலாம் என்றும், பல டேக்குகள் வாங்கும் உங்களுக்கு அது பெரிய உணர்வாக இருக்காது எனவும், ஆனால் மற்ற பெண்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல ஆசிரியராக வெளியே போகப்போகிறார்கள் எனவும், அப்படியிருக்கும் அவங்களின் மனவேதனையை எப்படி நீங்கள் சாதாரணமா சொல்லிட்டீங்க என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த அபிராமி, ஒன் மோர் விசயம், உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி என்றும், நாங்க பாத்துக்கறோ ஆண்ட்டி, இந்த வயசுல உங்கள் உடம்பை பார்த்துக்கோங்க என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அபிராமி.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.