நம்பவைத்து ஏமாற்றிய கனகா.. செம கடுப்பில் பகீர் கிளப்பிய பிரபலம்..!
Author: Vignesh23 December 2023, 3:23 pm
சமீபத்தில் நடிகை கனகாவை சந்தித்து விட்டு வந்த நிலையில், தற்போது தன்னை ஏமாற்றி விட்டதாக குட்டி பத்மினி குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80 காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார்.

இவர், தமிழில் முன்னாடி நடிகர்களுடன் நடித்து அசத்திருந்தார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா. தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கி கொடுத்தது.

திடீரென இவரது தாயார் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் கனகா தவித்து வந்தார். தந்தையுடன் சொத்து பிரச்சனையால் தகராறு செய்தும் வந்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து வந்த கனகா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருந்த கனகா எப்போது வெளியே வருகின்றார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் பலர் இருந்தனர். இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி அவரது வீட்டருகே காத்திருந்து ஒருநாள் கனகாவை பார்த்ததுடன் அவருடன் புகைப்படமும் எடுத்து வெளியிட்டார்.

ரசிகர்களுக்காக நிச்சயம் பேட்டி கொடுக்கிறேன் என்று குட்டி பத்மினியிடம் வாக்கு கொடுத்த கனகா தற்போது, அவரது அழைப்பையும் மெசேஜையும் எடுப்பதே இல்லையாம். மேலும், குட்டி பத்மினியை வீட்டிற்கு கூட அழைக்காமல் காபி ஷாப் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தான் கனகா பேசியுள்ளார்.
குட்டி பத்மினி மேலும் பேசுகையில் கனகா யாரையும் சந்திக்க தயாராக இல்லை என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது. அன்று என்னை கட்டியணைத்து முத்தமிட்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு தான் வீட்டிற்கு சென்றார். அந்த நினைவே, எனக்கு போதுமானது தனக்கான வாழ்க்கையை கனகா தேர்ந்தெடுத்து விட்டார். தனிமை தான் கனகாவிற்கு பிடித்திருக்கிறது.
யாரிடம் அவர் ஏமாந்தார் என்று தெரியவில்லை. இனி பழகினாலும் ஏமாந்து விடுவோமோ என்ற பயம் கனகாவுக்கு வந்துவிட்டது. அவர் தனிமையில், இருப்பதற்கு கனகா தயார் செய்து கொண்டார். ஆனால், நான் அவருக்கு எந்த உதவியும் செய்ய தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.