லப்பர் பந்து
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் பொண்டாட்டியாக நடிகை சிவாஷிகா நடித்திருப்பார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட வரும் இவர் தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை சுவாசிகா
இந்த நிலையில் நடிகை சுவாசிகா மலையாளத்தில் ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என்கிற புலனாய்வு திரில்லர் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிவாஷிகா நடித்திருக்கிறார் .
ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்:
8ம் தேதி வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாஷிகா நடிப்பை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் உண்மையிலேயே கெத்து கொண்டாட்டம் கெத்து தான் என கருத்து கூறி அவரது படத்தையும் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.