சூப்பர் ஸ்டார் கூட வசூல் பண்ண முடியாது.. ரூ.3,000 கோடி வசூல் செய்த லேடி சூப்பர் ஸ்டார்!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2024, 12:15 pm
ரூ.3,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனே படங்கள்
ஒரு படம் வெளியானால் உடனே அது ஹிட் படமா இல்லையா என்பதை பெரும்பாலும் வசூலை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் தமிழ் சினிமா பொறுத்தவரை ரூ.1000 கோடி வசூல் என்பது அரிதான விஷயம். இந்தியில் ரூ.1000 கோடி என்பது சுலபமாகவே பார்க்கப்படுகிறது.
அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான பதான், ஜவான் மற்றும் கல்கி படங்கள். பான் இண்டியா படம் என்பதால் ரூ.1000 வசூல் என்று சொல்லலாம். ஆனால் எத்தனையோ படங்கள் பான் இந்தியா படமாக வந்தும் வசூலில் வெற்றியடையவில்லை.
இதையும் படியுங்க: இந்தியன் 2 வசூலை கூட தாண்டல…கங்குவா படத்தின் 2வது நாள் வசூல் நிலவரம்!
அதிக ரசிகர்களை கொண்ட நடிகை தீபிகா படுகோன ரூ.3,000 கோடி வசூல் செய்துள்ளார். இவர் தொடர்ச்சியாக நடித்த பதான், ஜவான், கல்கி படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது.
இதுவரை எந்த நடிகையும் செய்யாத சாதனையை தீபிகா படுகோனே செய்துள்ளார். 3 படமும் தலா ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் லேடி சூப்பர் ஸ்டாராக தீபிகா உச்ச நடிகையாக உள்ளார்.