அதை பண்ணி தான் சினிமாவுக்கு வந்தேன்… ரகசியத்தை போட்டுடைத்த லட்சுமி மேனன்!

Author: Rajesh
1 February 2024, 9:05 pm

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

lakshmi menon - updatenewse360

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசியுள்ளார்.

அதாவது, நான் ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாட அதை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்தனர். இதை பார்த்து தான் மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அப்படித்தான் சினிமாவில் அறிமுகம் ஆனேன். அதே நடனம் தான் எனக்கு தமிழில் கும்கி பட வாய்ப்பும் தேடி வந்தது என்றார். லட்சுமி மேனனின் அப்பா துபாயில் கலைஞராக இருக்கிறார். அத்தோடு இவரது அம்மா உஷா ஒரு நடன ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 419

    1

    0