காதலனுடன் பிரேக்அப்?.. அடித்து துவைத்த லட்சுமிமேனன்.. ஸ்டிராங்கான லேடி தான்..!
Author: Vignesh31 August 2023, 4:45 pm
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிகர் விஷாலுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கூட செய்தி வெளியானது. ஆனால் அது வெறும் பொய்யான செய்தி என்று விஷால் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமி மேனனிடம்,
புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அதில் வில்லன்களை வெளுத்து வாங்கிய காட்சிகள் குறித்தும் கேட்டதற்கு, அந்த படத்தில் கடுமையாக சண்டை போட்டதாகவும், நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் என் பாய் பிரண்டை நினைத்துக் கொண்டுதான் எல்லோரையும் அடித்து துவைத்தேன் என்றும், அப்படித்தான் அந்த காட்சியில் நடித்ததாகவும் லட்சுமிமேனன் கூறியுள்ளார். இதிலிருந்து லட்சுமிமேனன் காதலனுடன் பிரேக்கப் ஆகி அவர் மீது இருக்கும் கடும் கோபத்தில் தான் இவர் இப்படி அந்த காட்சியில் நடித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.