கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில், சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் எடுத்த பேட்டியில், யாரிடமாவது காதலை கூறி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னிடம் யாரும் காதல் செய்ததில்லை. ஆனால், நான் ஒருவரிடம் பள்ளியில் படிக்கும்போது நேராக சென்று காதலை வெளிப்படுத்தினேன். அவரும் ஓகே சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அடிக்கடி பேசுவேன் என்றும், அவுட்டிங் எல்லாம் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்று நடிகை லட்சுமி மேனன் வெட்கத்துடன் கூறி இருக்கிறார்.
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
This website uses cookies.