தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நகைச்சுவை நடிகருடன் ஜோடி போட உள்ளார்.
தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.
மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்து பாண்டியன் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.
தற்பொழுது வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் எமோஷனல் காதல் காமெடி என மூன்றும் கலந்த திரைப்படம் ஒன்றில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் காதலராக நடிக்க உள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வழக்கத்திற்கு மாறுபட்ட கதைகள் கொண்ட திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.
மேலும் முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வந்த லட்சுமிமேனன் சமீபத்தில் காமெடி நடிகர் உடன் நடிப்பது வெள்ளி திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.