அட நம்ம லட்சுமி மேனனா இது..? என்ன இப்படி ஆயிட்டாங்க..! ஷாக் ஆன ரசிகர்கள்..!

Author: Vignesh
28 December 2022, 5:30 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாய்ப்பு இல்லாத காரணத்தால் நகைச்சுவை நடிகருடன் ஜோடி போட உள்ளார்.

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்து பாண்டியன் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.

தற்பொழுது வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் எமோஷனல் காதல் காமெடி என மூன்றும் கலந்த திரைப்படம் ஒன்றில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் காதலராக நடிக்க உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வழக்கத்திற்கு மாறுபட்ட கதைகள் கொண்ட திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வந்த லட்சுமிமேனன் சமீபத்தில் காமெடி நடிகர் உடன் நடிப்பது வெள்ளி திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில், நடிகை லட்சுமிமேனன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முன்னணி கதாநாயகன் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

lakshmi menon - updatenewse360

மேலும், இந்த புகைப்படத்தில் இவர் படு ஸ்மார்ட் ஆக ஸ்லிம்மாக காட்சி அளித்திருப்பது தான் ரசிகர்களின் அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்று கூறலாம்.

lakshmi menon - updatenews360

சமூக வலைத்தளத்தில் இதுவரை நடிகை குஷ்பூ உடல் எடை குறைத்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது போலவே இவரும் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம லட்சுமி மேனன் என்று மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள். அந்த அளவு படும் பிட்டாக தனது மேனி அழகை மிக அழகாக இவர் பதிவு செய்திருக்கிறார்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே