செக்ஸியாக மாறிய லட்சுமி மேனன் : மாடர்ன் உடையில் மார்க்கமான Photo!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 5:45 pm

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது
மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் சன் டிவியில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபுவுடன் மீண்டும் சேர்ந்து நடித்த புலிகுத்தி பாண்டியன் ஒளிபரப்பாகி TRP எகிறி உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 6569

    1

    0