ஸ்ரீதேவியை ஆடையில்லாமல் நடிக்க சொன்ன தயாரிப்பாளர் : உண்மையை உடைத்த நடிகை..!!

Author: Vignesh
24 March 2023, 6:00 pm

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

rajini - updatenews360

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். துபாய்யில் கடந்த 2018-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், நடிகை லட்சுமி சிறுவயதில் நடிகை ஸ்ரீதேவி பட்ட துயரங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

lakshmi - updatenews360

ஒரு திரைப்படத்தில் தனக்கும் நடிகர் ஜெய்சங்கருக்கும் மகளாக ஸ்ரீதேவி 6 வயதாக இருக்கும் போது நடித்த போது, அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அந்த திரைப்படம் நின்றுபோன நிலையில், 4 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தயாரிப்பாளர் அப்படத்தினை எடுக்கலாம் என்றும் நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டு உள்ளாராம்.

lakshmi - updatenews360

அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த போது ஸ்ரீதேவிக்கு 10 வயது, பெண்ணாக மலரத்துவங்கும் வயதில் கிளைமேக்ஸ் காட்சியின் போது, ஆடையில்லாமல் தலைகீழாகத் தொங்கவிடும் காட்சியாகயில், ஸ்ரீதேவி என்னிடம் வந்து, அக்கா எனக்கு சட்டை இல்லாமல் நிற்க ஒருமாதிரியாக இருக்கு என்று கெஞ்சிகேட்டாள்.

lakshmi - updatenews360

உடனே நான் இந்த சீனை மாற்ற முடியாதா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் முடியாது கதையின் கண்ட்டினியூட்டி சீன் என்று கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். அப்போது ஸ்ரீதேவியின் வேதனை, அவமானம் பிடுங்கித்தின்ன, உதடுகள் துடிக்க வேதையுடன் கண்ணீர் விட்டு நின்றாள் என்று நடிகை லட்சுமி தெரிவித்துள்ளார்.

lakshmi - updatenews360

இதனிடையே, இதை அறிந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி, தயாரிப்பாளரிடம் சென்று மன்னிச்சுக்குங்க சார் இந்த சீனில் என் மகள் நடிக்கமாட்டாள் என்றும், இப்படி நடிச்சு பொழைக்கணும்னு அவசியமில்லை என்று அவமானப்படுத்திவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 688

    2

    1