இது போன்ற படத்தில் நடிக்க வெட்கமா இல்ல? ராஷ்மிகாவை கிழித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
Author: Rajesh3 February 2024, 9:50 pm
சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சமீபத்தியில் ராஷ்மிகா மந்தனா – ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், வக்கிரத்தின் உச்சகட்டம் தான் இந்த திரைப்படம். இப்படி ஒரு ஆணாதிக்கம் நிறைந்த படங்களை எடுப்பதால் சமூகத்தில் மேலும் சீர்கேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இது போன்ற படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க கூடாது. இதுபோன்ற தவறான கருத்துகள் தான் மக்களைப் போய்ச் சேரும். பெண்களை சிறுமைப்படுத்தும் இதுபோன்ற கதைகளில் நடிக்க ராஷ்மிகா யோசிக்கவேண்டும்.
இந்த படத்தை எடுத்தவர் மனதில் எவ்வளவு ஆணாதிக்க வக்கிரம் இருந்திருக்கும். அதன் வெளிப்பாடு தான் படத்தில் தெரிந்தது. படத்தை பார்த்துவிட்டு தூங்கினால் பயம் தான் கனவில் வருகிறது. அனிமல் படத்தைப் பார்த்து என்னால தாங்க முடியாமத்தான் கிண்டலா என்னோட ட்விட்டர்ல பதிவு பண்ணேன். ஆனால், ரசிகர்கள் வேறமாதிரி எடுத்துக்கிட்டாங்க. இப்படியொரு மோசமான படத்துக்கு வெளிப்படையால்லாம் திட்ட முடியாது என விமர்சித்து தள்ளியுள்ளார் லட்சுமி ராமகிரிஷ்ணன்.