சூப்பர் ஸ்டார்னா சும்மாவா? “லால் சலாம்” முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Author: Rajesh8 February 2024, 3:41 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
உலகம் முழுக்க நாளை வெளியாகும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் அட்வான்ஸ் புக்கிங்கில் பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வசூல் ஈட்டியுள்ளது. அதன்படி லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 5 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என யூகித்துள்ளனர்.
அதுமட்டும் இன்றி ரஜினியின் கேமியோ ரோல் நன்றாக இருந்தால் ரூ. 100 கோடி ரூபாய் கிளப்பில் கூட எளிதாக இணைந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்பார்த்ததை போலவே வசூல் ஈட்டுகிறதா? அல்லது அதைவிட கூடுதல் வசூல் கிடைக்குமா என்று!