சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இப்படம் தமிழ்நாட்டில் நேற்று 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது. படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள லால்சலாம் திரைப்படம் முதல் நாள் இந்திய அளவில் 4.30 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மொத்தமாக உலக அளவில் லால் சலாம் படத்தின் வசூல் ரூபாய் எட்டு கோடிக்கும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூபாய் 98 கோடி வசூலை வாரி குவித்து இருந்தது. அதில், 10 சதவீதம் கூட இந்த திரைப்படம் எட்டாதது தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.