அடேங்கப்பா.. லால் சலாம் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?..

Author: Vignesh
1 February 2024, 3:30 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் வேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியானது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் அதில் நடக்கும் அரசியலை பற்றியும் உருவாகியுள்ளது. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய ரோலில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள டீசரில், “விளையாட்டில் மதத்தை கலந்திருக்கீங்க… குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சியிருக்கீங்க” என ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ:

இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஹிந்தி மொழி டப்பிங் ரைட்ஸ் மட்டும் ரூபாய் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ஹிந்தி மொழி டப்பிங் ரைட்ஸ் ரூபாய் 16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!